தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
தமிழ்த் திரையுலகில் அறிமுகானாலும் இங்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் ஹிந்திக்குச் சென்று கனவுக்கன்னி எனப் பெயர் பெற்றவர் நடிகை ஹேமமாலினி. தஞ்சாவூர் மாவட்டத்தின் அம்மன்குடி என்ற ஊரில் பிறந்தவர். 1963ல் வெளிவந்த 'இது சத்தியம்' என்ற படத்தில் நடனம் மட்டும் ஆடியிருந்தார். அந்தக் காலத்திய தமிழ் இயக்குனர்கள் ஹேமமாலினியின் திறமையை உணராமல் போய்விட்டார்கள். ஹிந்திக்குச் சென்று 70களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.
தனது அம்மா ஜெயலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
“ஆண்டின் இந்த நாள் என் இதயத்திற்கு மிக நெருக்கமான நாள். என் அன்பான அம்மாவின் பிறந்தநாளை நான் எப்போதும் கொண்டாடத் தவறுவதில்லை. அவர் எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி. அவரது அற்புதமான ஆளுமை, சினிமா துறையிலும் அதற்கு அப்பாலும் அவர் உருவாக்கிய நல்லுறுவுதான் எனது வாழ்க்கை வடிவமைத்தது. நான் நானாக இருக்க வைத்தது. நன்றி அம்மா, உங்களை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டு அம்மாவுடன் இருந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.