மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் 'இட்லி கடை'. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இட்லி கடை படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட துவங்கியுள்ளனர். அஸ்வின் வேடத்தில் அருண் விஜய் நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். பின்னர் விஷ்ணுவர்தன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக அறிவித்தனர். இப்போது சிவனேசன் என்ற வேடத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளதாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்., 14ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணியளவில் பிரமாண்டமாய் நடப்பதாக அறிவித்துள்ளனர். அக்., 1ல் படம் ரிலீஸாகிறது.