எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்து விட்டவர் நடிகர் மோகன்லால். தற்போது அங்கே நம்பர் ஒன் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால், தனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்த டைரக்சன் ஆசைக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிர் கொடுக்கும் விதமாக பரோஸ் என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார்.
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்து சென்றதன் பின்னணியில் உள்ள சில மர்மங்களை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அவரும் ஒரு மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக இதன் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் தள்ளி தள்ளிப் போனது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. படமும் திரையிடுவதற்கு ஏற்ப தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ள மோகன்லால் நேற்று மும்பையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் மோகன்லாலின் மிக தீவிரமான ரசிகன் நான் என்றும் சிலாகித்துக் கூறினார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் கண்ணப்பா திரைப்படத்திலும் மோகன்லால், அக்ஷய் குமார் இருவருமே இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் இந்த விழாவில் அக்ஷய் குமார் கலந்து கொள்ள ஒரு காரணம்.