பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் . இவர் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி உடன் 'மல்லிஸ்வரி' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் கத்ரீனா கைப் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "தற்போது சினிமாவில் கதாநாயகிகள் பலரும் டாக்டர், இன்ஜினியரிங் அல்லது ஏதாவது டிகிரி படிப்புடன் உள்ளார்கள். நானும், நடிகையாகும் ஆரம்ப காலத்தில் படிப்பு இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியுமா என எண்ணினேன். ஆனால், படிப்பு முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். பத்தாம் வகுப்பு பெயில், நான் இன்றும் முன்னனி நடிகையாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைப் சினிமாவில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.