துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பாலிவுட்டில் 2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. '12த் பெயில்' படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். 'செக்டர் - 36', 'த சபர்மதி ரிப்போர்ட்' உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், திடீரென நடிப்பிலிருந்து விலகுவது போன்று ஒரு பதிவிட்டு அதிர்ச்சியடைய செய்தார். அவரது பதிவில், ''கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன், ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது அறிவிப்பு பாலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள், திரையுலகினர் அவரது இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என கோரி வந்தனர். இந்த நிலையில், தான் நடிப்பை விட்டு விலகவில்லை என்று விக்ராந்த்மாஸே தெரிவித்துள்ளார். ''என் உடல்நிலை காரணமாகவும் குடும்பத்துக்காகவும் நீண்ட இடைவெளி தேவை. நான் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்'' என்று கூறியுள்ளார்.