போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ்த் திரையுலகத்தில் பல படங்களைத் தயாரித்த ஒரு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்நிறுவனம், “கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அன்பே சிவம், புதுப்பேட்டை” உள்ளிட்ட சில தரமான படங்களைத் தயாரித்துள்ளது. இவை தவிர விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு, அஜித், விஜய், சூர்யா, பார்த்திபன், பிரபுதேவா, சிலம்பரசன், ரவி மோகன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த படங்களையும் தயாரித்துள்ளது.
கடைசியாக 2015ல் ரவி மோகன், த்ரிஷா, அஞ்சலி நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்தார்கள். அந்நிறுவனத்தின் மூன்று தயாரிப்பாளர்களில் இருவர் மறைந்ததும் தொடர்ந்து அவர்கள் படங்களைத் தயாரிப்பதை கைவிட்டார்கள்.
இந்நிலையில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு அவர்களில் மறைந்த தயாரிப்பாளர் முரளிதரனின் மகன்கள் டாக்டர் ஸ்ரீவத்ஸன், கோகுல் கிருஷ்ணன் அந்தக் கம்பெனி சார்பாக புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளார்கள். நிறுவனத்தின் 27வது படமாக உருவாக உள்ள அப்படத்தை சஜோ சுந்தர் இயக்க புகழ் நாயகனாக நடிக்கிறார். இந்த வாரம் ஜுன் 6ம் தேதி படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகிறது.
தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்களைத் தயாரித்த இது போன்ற நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாகவே தயாரிப்பை விட்டு விலகியிருந்தார்கள். அவர்களில் இந்நிறுவனம் மீண்டும் வந்துள்ளது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.