பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாலிவுட்டில் வித்தியாசமான நடிகர் என பெயர் எடுத்தவர் பங்கஜ் திரிபாதி. இவரது மிர்சாபூர் தொடர் இப்போது மூன்றாவது சீசன் எட்டி உள்ளது. வரும் ஜூலை 5 முதல் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது. அவருடன் அலி பைசல், ஸ்வேதா திரிபாதி, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குர்மீத் சிங் மற்றும் ஆனந்த் ஐயர் இயக்கி உள்ளனர். இந்த தொடரின் புரொமோஷன் போது பங்கஜ் அளித்த பேட்டி :
டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பற்றி குறிப்பாக அந்த கடைசி 10 நிமிடத்தில் வரும் உங்கள் காட்சிகள் பற்றி?
எங்கள் படைப்பையும், தொடரின் டிரைலரையும் ரசிகர்கள் விரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடம் இருந்து பெறும் அன்பினால் வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
பல கேரக்டர்களில் நடித்துள்ளீர்கள், நிஜ வாழ்க்கையில் உங்களது கேரக்டரில் யாராவது நடித்திருக்கிறீர்களா?
பொதுவாக நான் நடந்து செல்லும் போதெல்லாம் என் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்து அதை தெரியாத ஒருவர் மீது பயன்படுத்தி, அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அறிய முயற்சிப்பேன். ஒரு வாரத்திற்கு முன்பு, நான் நடந்து செல்லும்போது ஒரு பையன் வந்து, பங்கஜ் திரிபாதி என்று சொன்னான். உடனே என் கேரக்டர் மாதிரி ஒரு லுக் கொடுத்து கிளம்பிவிட்டான். ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் பலரையும் கடக்கிறேன். என்றாலும், அன்று என் கதாபாத்திரங்களில் ஒருவரை நான் சந்தித்ததை நினைத்து மகிழ்ந்தேன்.
எதிர்காலத்தில் மிர்சாபூர் சீரிஸ் மக்கள் மனதில் இருக்கும் என நினைக்கிறீர்களா?
இந்த தொடரின் பார்வையாளர்கள் மாறுபட்டவர்கள் என்பதால் இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பார்கள். இன்னும் 15 - 20 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் கொள்வார்கள். இந்த தொடரை அமெரிக்காவில் இருப்பவரும் விரும்புகிறார். காஜிபூரைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளரும் விரும்புகிறார். இந்தத் தொடரின் பார்வையாளர்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ஆனவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.