ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் சினிமாவின் சீனியர் நடிகர் சத்ருகன் சின்ஹா. 50 வருடங்களாக நடித்து வருகிறார். அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். உடல்நலம், வயது மூப்பு காரணமாக தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ரஜினி ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்தார்.
பாரம்பரியமிக்க இந்து குடும்பத்தை சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் ஜாஹீர் இக்பால் என்ற இஸ்லாமிய நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சத்ருகன் சின்ஹாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்து மத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சத்ருகன் சின்ஹாவுக்கு மகள் திருமணத்தில் உடன்பாடில்லையாம். என்றாலும் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் மன அழத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.