ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் 18, 2010ல் வெளிவந்த படம் 'ராவண்'. அப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆனது குறித்து அபிஷேக் பச்சன் ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “மறக்க முடியாத ஒரு நடிப்பு அபிஷேக். உனது மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பு இந்தப் படத்தில்… அதுதான் ஒரு கலைஞரின் உண்மையான மதிப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார் அபிஷேக்கின் தந்தையும், நடிகருமான அமிதாப் பச்சன்.
அந்தப் படத்தில் அபிஷேக் ஜோடியாக நடித்தது அமிதாப்பின் மருமகளும், அபிஷேக்கின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய். ஆனால், ஐஸ்வர்யா பற்றி தனது பதிவில் ஒரு வார்த்தையைக் கூட அமிதாப் குறிப்பிடவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது கமெண்ட் பகுதியில் ஏன் ஐஸ்வர்யா பற்றி சொல்லவில்லை என்று கேட்டுள்ளனர்.
அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி அடிக்கடி பிரிவு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்று அவரைக் குறிப்பிடாமல் அவரது மாமனாரே பதிவிடும் போது அடங்கிய வதந்திகள் மீண்டும் எழுகின்றன.