டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். அதன் பிறகு ஜெய்யுடன் இணைந்து தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்கிற படத்திலும் நடித்தார். தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் கடந்த 2021 ல் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பாலிவுட் தயாரிப்பாளரான ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் தான் நடித்திருந்த ஆர்டிகிள் 370 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் யாமி கவுதம். இந்த நிலையில் கடந்த மே பத்தாம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ள யாமி கவுதம் அட்சய திருதியை தினத்தில் குழந்தை பிறந்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் குழந்தைக்கு வேதவித் என பெயர் சூட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.