‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 1988ல் மான் வேட்டையாடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் வேட்டையாடிய மானை தங்களது சமூக சின்னமாக கருதும் பிஸ்னாய் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். ஆனாலும் இப்போது வரை இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு இது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக கைது செய்து தற்போது ஆறாவது நபரையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பிஸ்னாய் சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இன்னும் சல்மான்கானை பழிவாங்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார்கள் என்பது இந்த சம்பவம் மூலமாக உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சல்மான்கானின் முன்னாள் காதலி சோமி அலி என்பவர், “தயவு செய்து 1988ல் நடந்த விஷயத்திற்காக சல்மான்கானை மன்னித்து விடுமாறு பிஸ்னாய் சமூகத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக அனைத்திந்திய பிஸ்னாய் சமூகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தேவேந்திர புத்தியா என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சல்மான்கானை மன்னித்து விடுமாறு கேட்டிருப்பது நீங்கள் தான்.. நீங்கள் தவறு செய்யவில்லையே.. தவறு செய்தவர் சல்மான் கான்.. அவராகவே முன்வந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.. அது மட்டுமல்ல அவர் கோவிலுக்கு வந்து அவரது மன்னிப்பை கூற வேண்டும். மேலும் இதுபோன்று ஒரு தவறை எதிர்காலத்தில் எப்போதும் செய்ய மாட்டேன் என்றும் உறுதி அளிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கை பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




