ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் கடந்த கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து ரியல் ஹீரோவாக பலரின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து தற்போதும் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் சோனு சூட். அதனாலேயே இளைஞர்கள் பலரும் இவர் சொல்லும் விஷயங்களை கொஞ்சம் காது கொடுத்து கவனிக்கின்றனர். தற்போது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்து ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கும் விதமாக நடிகர் சோனு சூட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “நாம் நமது விளையாட்டு வீரர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம்மையும் நமது நாட்டையும் பெருமைப்படுத்துகிறவர்கள். ஒரு நாள் அவர்களை புகழ்கிறோம். அடுத்தநாளே அவர்களை கண்டபடி விமர்சிக்கிறோம். விழுவது அவர்கள் அல்ல.. நாம் தான்.. நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். நம் நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட் விளையாட வீரர்களையும் நேசிக்கிறேன். அவர்கள் எந்த அணிக்காக விளையாடுகிறார்கள் என்பதோ அவர்கள் கேப்டனாக இருக்கிறார்களா அல்லது 15வது வீரராக இருக்கிறார்களா என்பதும் விஷயமே அல்ல. அவர்கள் நமது ஹீரோக்கள்” என்று கூறியுள்ளார்.
தனது பதிவில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரையும் சோனு சூட் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் மீது சோசியல் மீடியாவில் பலரும் வைக்கும் விமர்சனங்களை பார்த்துவிட்டு தான் இது போன்ற பதிவை வெளியிட்டுள்ளார் சோனு சூட்.