சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் |

முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ்பெற்ற ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ள படம் டங்கி. ஷாரூக்கான், பொமன் இரானி, டாப்ஸி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பஞ்சாபிலிருந்து ஷாரூக்கான், டாப்ஸி உள்ளிட்ட 5 நண்பர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் திருட்டுத்தனமாக லண்டனுக்கு வேலை செய்ய செல்பவர்களாக நடித்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் புரமோசன் பணிகளை ஷாரூக்கான் தொடங்கி உள்ளார். முதல் கட்டமாக அவர் துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்களை நேரடியாக சந்தத்து அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.