த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இந்தாண்டில் இவரது நடிப்பில் பதான், ஜவான் என இரு படங்கள் வெளியாகி, இரண்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து இம்மாதம் இவரின் ‛டன்கி' படம் வெளியாகிறது. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். டாப்ஸி பன்னு, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், போமன் இரானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் டிரைலர் இன்று(டிச., 5) வெளியாகி உள்ளது. அதில் ஷாரூக், விக்கி கவுசல், டாப்ஸி உள்ளிட்ட 5 நண்பர்கள் இங்கிலாந்து செல்ல ஆசைப்படும் இவர்களின் முயற்சியே கதை. ஆங்கிலம் சரியாக தெரியாததால் இவர்களுக்கு விசா மறுக்கப்பட சட்டவிரோதமாக எல்லை தாண்டி இங்கிலாந்து செல்ல முயற்சிக்கிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் இன்னல்களும், வாழ்க்கை போராட்டமும் தான் கதை என டிரைலரை பார்க்கும்போது புரிகிறது. ஷாரூக்கானின் முந்தைய இரண்டு படங்கள் அதிரடி ஆக் ஷனாக வெளிவந்த நிலையில் இந்த படம் ஆக்ஷனில் இருந்து விலகி யதார்த்த படமாக உருவாகி உள்ளது.
ராஜ்குமார் ஹிரானி - ஷாரூக் கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் இது. அதனால் படம் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் ஷாரூக்கிற்கு இந்த படமும் வெற்றி பெற்றால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். அது நடக்குமா என்பது இம்மாதம் டிச., 21ல் தெரிந்துவிடும்.