பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் |
ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்த அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் படம் வசூலை குவித்து வருகிறது. ஆயிரம் கோடியை தொட்டு விடும் என்கிறார்கள்.
இந்த நிலையில் அனிமல் படத்தின் அடுத்த பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 'அனிமல் பார்க்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்துடன் சந்தீப் ரெட்டி வங்காவுடன் மேலும் இணைந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாக டி சீரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி சீரிஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது : “நம்பிக்கையின் அடிப்படையிலான இந்த கூட்டணி, ஆக்கபூர்வமான சுதந்திரத்தால் தூண்டப்படுகிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்த சினிமா அதிசயங்களை நிகழ்த்த இருக்கின்றனர். அவை பிரபாஸின் ஸ்பிரிட், அனிமல் பார்க், மற்றும் அல்லு அர்ஜுன் திரைப்படம் ஆகியவையாகும். 'கபீர் சிங்' (அர்ஜூன் ரெட்டியின் பாலிவுட் பதிப்பு) மற்றும் அனிமல் ஆகிய திரைப்படங்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த அத்தியாயங்கள் தயாராகின்றன” என்று அறிவித்துள்ளது.