12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
பழம்பெரும் பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் கோலி. இன்றைக்கு பிரபலமாக இருக்கும் நடிகர் அர்மான் கோலியின் தந்தை. 1973ம் ஆண்டு 'கஹானி கம் சப் கி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு முக்காபுலா, ஜானி துஷ்மன், ராஜ் திலக், விரோதி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
93 வயதான ராஜ்குமார் கோலி கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வரும் உடல்நல பிரச்னைகளுக்காக சிசிக்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று குளியலறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அர்மான் கோலி, கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ராஜ்குமார் கோலி மயங்கி கிடந்தார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராஜ்குமார் கோலியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த ராஜ்குமார் கோலிக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.