தங்களது படங்களை லண்டனில் பார்த்த சிம்ரன், பூஜா ஹெக்டே | 'ரெட்ரோ' படத்தில் இடம் பெற்ற 'செனோரீட்டா'.... இளையராஜாவின் பாடல் | நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் |
ஹிந்தியில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 2004ல் வெளியான படம் 'காக்கி'. அமிதாபச்சன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பில் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை மறைந்த பிரபல தயாரிப்பாளர் கே.சி ராமசாமி என்பவர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கே சி ராமசாமியின் மகன் அரியமான் ராமசாமி.
காக்கி திரைப்படம் வெளியாகி இருபதாவது வருடத்தை தொட இருப்பதால் வரும் 2024ல் அதைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் நிகழும் விதமாக புதிதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான காக்கி படத்துடனும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடிக்கிறார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்.