குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வரும் திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு பிரிதிவிராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிக படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்திலிருந்து தமிழில் (போகாதே), ஹிந்தியில் (சட்டரங்கா) என்கிற இரண்டாம் பாடலை வெளியிட்டுள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையில் வெளியாகி உள்ள இந்த பாடல் மெலோடி பாடலாக வெளியாகி இருக்கிறது.