லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இந்திய உளவாளிகளின் வீர தீர சாகத்தை சொல்லும் படம்தான் டைகர். ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை என ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிந்துளள நிலையில் தற்போது 3வது பாகம் வெளிவர இருக்கிறது. இதிலும் சல்மான்கான், கத்ரினா கைப் நடிக்கிறார்கள். படத்தை மனீஷ் சர்மா இயக்கி உள்ளார். தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டைகர் 3ல் கத்ரினா கைபின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கத்ரினா கைப் கூறியிருப்பதாவது: ஜோயா முதல் பெண் உளவாளி, அதை போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவள், அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக, ஒவ்வொரு முறையும் முன் வருகிறவர்.
ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.
எப்போதும் ஆக்ஷன் செய்வது எனக்கு உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை. அதனால் ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன். சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.