ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் 2021ல் வெளிவந்த படம் 'புஷ்பா'. சுமார் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம். அப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
ஷாரூக் நடித்து வெளிவந்த 'ஜவான்' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் ஒன்றைப் போட்டிருந்தார் அல்லு அர்ஜுன். அதற்கு பதிலளித்த ஷாரூக், “மிக்க நன்றி என் மனிதனே. உங்களது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அன்பானவர். ஒரு நெருப்பே என்னைப் புகழ்கிறது. இன்று எனது நாள் சிறப்பானது. ஜவானை இப்போது இருமுறை உணர்கிறேன். மூன்று நாட்களில் 'புஷ்பா'வை மூன்று முறை பார்த்ததால் உங்களிடமிருந்து நான் ஏதாவது கற்றுக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உங்களைக் கட்டிப்பிடிக்கிறேன், விரைவில் வந்து தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒன்றைத் தருவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா' படத்தை ஷாரூக்கே மூன்று முறை பார்த்துள்ளார் என்பதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'ஜவான்' படத்திற்கு அடுத்தடுத்து பல சினிமா பிரபலங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஏறக்குறைய அனைவருக்குமே சீக்கிரத்திலேயே பதில் தெரிவித்து நன்றி கூறி வருகிறார் ஷாரூக்கான்.