ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய்
சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி,
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் 'ஜவான்'. எப்படிப்பட்ட
விமர்சனம் வந்தாலும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து இந்தியத்
திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
முதல் நாளில் 129 கோடி,
இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில்
384 கோடி வசூலித்தது என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக
அறிவித்தது. இதில் சனிக்கிழமை வசூலான 144 கோடி என்பது இதுவரையில் எந்த ஒரு
படமும் ஒரே நாளில் வசூலிக்காத ஒரு தொகை.
நேற்று ஞாயிறன்றும்
விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் 136 கோடியைக் கடந்துள்ளது.
எனவே, நேற்றைய வசூலையும் சேர்த்து எதிர்பார்த்தபடி நான்கே நாட்களில்
இப்படம் 500 கோடியை கடந்து ரூ.520 கோடி வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வ
அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.