தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஜவான். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த வருடத்திலேயே ஜனவரி மாதத்தில் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஜவான் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் அதேபோன்ற ஒரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள கெய்ட்டி கேலக்ஸி திரையரங்கில் ஜவான் படத்திற்காக ஆறு மணி சிறப்புக் காட்சி திரையிடப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக பதான் படத்திற்கு 9 மணி சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 50 வருடங்களாக இதுபோன்று 9 மணி, 6 மணி சிறப்பு காட்சிகளை திரையிடுவதில்லை என்கிற கொள்கையுடன் இந்த திரையரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதன்முறையாக ஷாரூக்கானின் பதான் படத்திற்காக 9 மணி சிறப்பு காட்சியும் அடுத்ததாக மீண்டும் ஜவான் படத்திற்காக 6 மணி சிறப்பு காட்சியும் திரையிடும் விதமாக ரசிகர்களுக்காக தங்களது கொள்கையை தியேட்டர் நிர்வாகம் தளர்த்திக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷாரூக்கான் ரசிகர்கள் உற்சாகமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.