வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இந்திய நடிகைகள் இப்போது ஹாலிவுட் மற்றும் ஆங்கில படங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதோடு சர்வதேச தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பர தூதர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் அதிகமான வருமான வரி செலுத்தும் நடிகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் தீபிகா படுகோன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஆண்டு ஒன்றுக்கு 10 கோடிக்கு மேல் வரி செலுத்தி இருக்கிறார். இரண்டாவது இடம் ஆலியா பட்டுக்கு. அவர் 5 முதல் 6 கோடி செலுத்துகிறார், மூன்றாவது இடம் கத்ரினா கைபுக்கு. அவர் 5 கோடி கடந்த ஆண்டு வரி செலுத்தி உள்ளார்.
தீபிகா படுகோன் முதலிடத்தில் பிடிக்க காரணம், அவர் பாலிவுட் படங்களில் நடிக்கிறார். அதோடு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். தற்போது அவர் ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்குகிறார். தற்போது அவர் நடித்துள்ள 'ஜவான்' படத்திற்கு 15 கோடி வாங்கியுள்ளார். விளம்பர தூதராக பணியாற்றி ஆண்டுக்கு 10 கோடி சம்பாதிக்கிறார்.