'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 85 சவரன் நகை திருட்டுப்போன விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அவரது வீட்டிலேயே வேலை பார்த்த பணிப்பெண் கைவரிசை காட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல தற்போது பிரபல பாலிவுட் பின்னணி பாடகரான சோனு நிகமின் தந்தையின் வீட்டிலும் அந்த வீட்டில் பணிபுரிந்த டிரைவர் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் 72 லட்சம் ரூபாயை திருடிய நிகழ்வு தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எண்பது வயதான சோனு நிகமின் தந்தை தனியாக வசித்து வருகிறார். இவரிடம் ரேகன் என்கிற டிரைவர் எட்டு மாதங்களாக வேலை பார்த்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக அவரது மோசமான செயல்பாடுகள் காரணமாக வேலையை விட்டு நீக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஞாயிறன்று அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த சோனு நிகமின் தந்தை, பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது லாக்கரில் வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணத்தை காணாமல் திடுக்கிட்டார். இதை தொடர்ந்து தனது மகளிடம் இந்த விவரத்தை தெரிவித்தார்.
மறுநாள் தனது மகன் சோனு நிகமின் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய தந்தை இன்னொரு லாக்கரில் இருந்த 32 லட்சம் ரூபாயும் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகள் நிகிதா காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் தங்களிடம் டிரைவராக பணியாற்றிய ரேகன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது தந்தை வீட்டில் பணியாற்றியபோது நிர்வாக வசதிக்காக அவரிடமும் வீட்டில் உள்ள சில சாவிகள் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் அவர்தான் இதை செய்திருக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து சோனு நிகமின் தந்தை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் செய்து சோதனை செய்தபோது ஆளில்லாத சமயத்தில் டிரைவர் தன் கையில் சில பைகளுடன் வெளியேறுவது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து டிரைவரை பிடித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே நபர் இப்படி அடுத்தடுத்த நாளில் 72 லட்சம் ரூபாயை திருடிய நிகழ்வு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.