2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்கள் எதும் வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார். மேலும் 'படே மியான் சோட் மியான்' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் டைகர் ஷெராப், பிருதிவிராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பிரமாண்டமான சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இதில் டூப் நடிகரை பயன்படுத்துமாறு அக்ஷய்குமாரிடம் படக்குழு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். இதைதொடர்ந்து சண்டை காட்சியின் போது அக்ஷய்குமாருக்கு பலத்த அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.