ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அவருக்கு உதவி செய்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசும் விசாரணை வளைத்தில் உள்ளார்.
இதற்கிடையில் சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது. “என்னை காதலித்ததை தவிர ஜாக்குலின் வேறு எந்த தவறும் செய்யவில்லை” என்று சுகேஷ் வெளிப்படையாகவே கூறினார்.
சமீபத்தில் தசரா பண்டிகைக்கு ஜாக்குலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய சுகேஷ் “உன்னை நான் காப்பாற்றுவேன். உன் மகிழ்ச்சியை திரும்ப பெற்றுத் தருவேன். உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று உருக உருக காதல் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் சுகேஷ், ஜாக்குலின் காதல் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஆனந்த் குமார். “சுகேஷ் எப்படி நெட்வொர்க்குகளை உருவாக்கி மோசடிகள் செய்தார். பாலிவுட் பிரபலங்கள் இதில் சிக்கியது எப்படி போன்றவற்றுடன் சுகேஷ் - ஜாக்குலின் காதல் உள்ளிட்டவைகளையும் அடக்கி இந்த படம் உருவாகிறதாம். இதுதொடர்பாக திகார் சிறை அதிகாரியை சந்தித்து சுகேஷ் பற்றிய விவரங்களை ஆனந்த் குமார் சேகரிக்க உள்ளாராம். இது சினிமா படமாகவோ அல்லது வெப் தொடராகவோ வெளிவர வாய்ப்புள்ளது.