'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபீராகம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பதான்'. இப்படம் வசூலில் புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி இதுவரையில் 953 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்திய அளவில் 593 கோடியும், வெளிநாடுகளில் 360 கோடியும் வசூலித்துள்ளது. 1000 கோடி வசூலைத் தொட இன்னும் 47 கோடிதான் தேவை. இந்த வார இறுதிக்குள் அந்த சாதனையையும் இந்தப் படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வசூலைக் கடக்கும் போது இப்படம் அதிக வசூலைப் பெற்ற இரண்டாது ஹிந்திப் படம் என்ற சாதனையைப் படைக்கும். இரண்டாவது இந்தியப் படம் என்ற சாதனையைப் படைக்க 'கேஜிஎப் 2' படத்தின் 1200 கோடி, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 1200 கோடி வசூலை முறியடிக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.