ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்த படமாமக 'பாகுபலி 2' படம் இருக்கிறது. அப்படம் இந்தியாவில் 1400 கோடி வசூலை அள்ளியது. உலகம் முழுவதும் 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த சாதனையை இன்னும் எந்த ஒரு இந்தியப் படமும் முறியடிக்கவில்லை.
ஷாரூக்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பதான்' படம் தற்போது வரை உலகம் முழுவதுமான வசூலாக 634 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவில் 395 கோடி வசூலித்துள்ளது. 'பாகுபலி 2, பதான்' இரண்டு படங்களுக்குமான 8 நாட்கள் வசூலைக் கணக்கிட்டால் 'பதான்' படத்தின் நிகர வசூல் 337 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 227 கோடியாகவும் உள்ளது.
தொடர்ந்து 'பதான்' படத்தின் வசூல் சிறப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது. அந்த வசூல் தொடர்ந்தால் 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்குமா என பாக்ஸ் ஆபீசில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறைந்த பட்சம் 'பாகுபலி 2' படத்தின் ஹிந்தி வசூலான 510 கோடியை 'பதான்' முறியடிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.