ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பெருமையை இழந்து, தென்னிந்தியப் படங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தது. இழந்த அந்தப் பெருமையை தற்போது 'பதான்' படம் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.
படம் வெளியான 5 நாட்களில் மட்டும் 543 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி மொத்த வசூலாகவும், வெளிநாடுகளில் 208 கோடி ரூபாய் மொத்த வசூலாக அமைந்துள்ளது.
ஒரு ஹிந்திப் படம் அதி வேகமாக 500 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்ற முதல் படம் 'பதான்' என்ற சாதனையைத் தற்போது புதிதாக படைத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பெரும் வெற்றிப்படமாக 'பதான்' அமைந்துள்ளது. ஹிந்திப் படங்களின் வசூலில் மேலும் சில புதிய சாதனைகளை இப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.