ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், வெளிநாடுகளில் 100 கோடியையும் கடந்துள்ளது. இந்திய நிகர வசூலாக 161 கோடி வரை பெற்றுள்ளது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.
இதற்கு முன்பு தென்னிந்தியப் படங்களான 'கேஜிஎப் 2' 140 கோடியும், 'பாகுபலி 2' 127 கோடியும் பெற்ற சாதனையை 161 கோடி வசூலித்து 'பதான்' புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். முதல் முறையாக ஒரு ஹிந்திப் படம் இந்த அளவு வசூலித்திருப்பது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் 400 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.