சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட்டில் எழுபதுகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரீனா ராய். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படி காட்சியளித்தாரோ கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றத்தில் தான் நடிகை சோனாக்சி சின்ஹாவும் இருக்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ரீனா ராய் அவ்வளவாக வெளியில் பேசப்படவில்லை. ஆனால் நடிகை சோனாக்சி சின்ஹா நடிக்க வந்த பிறகு இவர்களது உருவ ஒற்றுமை குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள ரீனா ராய் சோனாக்சியும் தன்னைப்போல இருப்பது பற்றி தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு கோ இன்சிடென்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ரீனா ராயை வைத்து படங்களை தயாரித்துள்ள சீனியர் தயாரிப்பாளர் ஒருவர் இன்னொரு ஆச்சரியமான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு சோனாக்சியின் தந்தை சத்ருகன் சின்ஹா, ரீனா ராய் ஆகியோர் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தில் சத்ருகன் சின்ஹா மீது காதலில் விழுந்தார் ரீனா ராய். அப்போது ஹத்கடி என்கிற படத்தில் சத்ருகன் சின்ஹா, சஞ்சீவ்குமார் ஆகியோருடன் சேர்த்து ரீனா ராயும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்ய சென்றார் அந்த தயாரிப்பாளர். அப்போது சத்ருகன் சின்ஹா தனது காதலை ஏற்றுக்கொண்டால்தான் இந்த படத்தில் தான் நடிப்பேன் என்றும் அப்படி இல்லை என்றால் எட்டு நாட்களுக்குள் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கண்ணீருடன் ஒரு நிபந்தனை விதித்தாராம் ரீனா ராய்.
ஆனால் அப்போது சத்ருகன் சின்கா ஏற்கனவே திருமணமாகி இருந்தார். ரீனா ராயின் இந்த காதலையும் அவரது கோரிக்கையையும் கேட்டு சத்ருகன் சின்ஹாவும் கண்ணீர் விட்டாரே தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பிறகு மோசின் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் செட்டிலாகிவிட்டார் ரீனா ராய். ஆனால் சத்ருகன் சின்ஹாவின் மனைவி மூலம் பிறந்த குழந்தையான சோனாக்சி, ரீனா ராய் உருவத்திலேயே அச்சுஅசலாக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது இன்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார் அந்த தயாரிப்பாளர்.