ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
கங்கனா இயக்கி வரும் எமெர்ஜென்சி படத்தில் அவர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் காந்தியாக மலையாள நடிகர் விஷக் நாயர் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது : இந்திராவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சஞ்சய். அப்பாவித்தனமான முகமும் சாதுர்யமான செயல்பாடுகளையும் கொண்டவர். சஞ்சய் அவரது தாயின் நீட்சி. சஞ்சய் கேரக்டரில் நடிக்க 6 மாதங்களுக்கும் மேலாக ஒரு முகத்தைத் தேடினேன், தற்போது பொருத்தமானவரை கண்டுபிடித்து விட்டேன். ஒரு புதிய முகத்தை மிகப் பெரிய அளவிலான படத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது முதல் இந்தி படம், சஞ்சயின் கதாபாத்திரத்திற்கு அவர் சிறந்த நீதியை வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்கிறார் கங்கனா ரணவத்.