நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த பான் இந்தியா படம் 'லைகர்'. ஆனால், ஒரு மொழியில் கூட வரவேற்பைப் பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கிலாவது ஒரு நல்ல மார்க்கெட் இருந்தது. பான் இந்தியா படம், ஹிந்தியில் கொண்டு செல்கிறோம் எனச் சொல்லி அவரது தெலுங்கு மார்க்கெட்டையும் சேர்த்து சிக்கலுக்கு உள்ளாக்கிவிட்டார்கள் 'லைகர்' குழுவினர்
ஹிந்தி கதாநாயகி அனன்யா பாண்டே, மும்பை கதைக்களம் என இருந்தும் இப்படம் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தியேட்டர்களில் இருந்தும் இப்படம் தூக்கப்பட்டுவிட்டது. ஹிந்தியில் மட்டும் இப்படம் 20 கோடியைத்தான் வசூலித்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் அடுத்த வெளியீடாக 'குஷி' படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். 'லைகர்' மூலம் விஜய் இழந்த மார்க்கெட்டை இந்த 'குஷி' தான் வந்து காப்பாற்ற வேண்டும்.