'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் மட்டும் அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை, சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, ரன்வீர் சிங்குடன் அனிமல் மற்றும் டைகர் ஷெராபுடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து அவர் நடித்துள்ள குட்பை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமிதாபச்சனும், ராஷ்மிகாவும் தந்தை- மகள் தோற்றத்தில் காணப்படுகிறார்கள். அமிதாபச்சன் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருக்க அதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா . இந்த ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.