பிளாஷ்பேக்: “முதல்வனை” தவறவிட்ட மூன்று முன்னணி நாயகர்கள் | பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி | சபாபதி, சந்திரமுகி, கல்கி 2898 ஏடி- ஞாயிறு திரைப்படங்கள் | டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் |
நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் திருமண முறிவுக்கு பிறகு கடந்த 2021ல் பிரபல பாட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் இந்திய அரசின் உயரிய இரண்டாம் அர்ஜுனா விருதை பெற்றவர் இவர். அதே சமயம் தெலுங்கு சினிமாவில் ஒரே படத்தில் அதுவும் ஒரு பாடலுக்கு ஆடிய கையோடு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் ஜுவாலா கட்டா. அதற்கு காரணம் என்ன என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
"இளம் நடிகரான நிதின் எனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தார். ஒருமுறை அவரை சந்தித்து பேசும்போது நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என்று கேட்டவர் என்னுடைய குண்டுஜாரி கள்ளன் தையின்டே என்கிற படத்தில் ஒரு நடன பாடல் ஒன்று உள்ளது. அதில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். சும்மா தானே கேட்கிறார் என அப்போதைக்கு சரி என சொல்லி வைத்தேன். ஆனால் மூன்று மாதம் கழித்து எல்லாம் ரெடியாக இருக்கிறது ஷூட்டிங் வர தயாரா என்று கேட்டபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த நேரத்தில் மாட்டேன் என்று சொன்னால் அதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் அந்த பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டேன். ஆரம்பத்தில் கால்வரை மறைக்கும் ஆடையாக கொடுத்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் உடையின் அளவை குறைத்துக் கொண்டு குட்டை பாவடை அளவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். நிதினை அழைத்து என்ன இது என்று கேட்டதற்கு இந்த ட்ரஸ் சூப்பராக இருக்கிறது என்று தான் கூறினார். அந்த படத்தில் என்னை நடிக்க வைத்தது படத்தின் பப்ளிசிட்டிக்காக மட்டும் தான் என்பது நன்றாகவே தெரிந்தது. அதன்பிறகு அந்த படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டேன்" என்று கூறியுள்ளார் ஜுவாலா கட்டா.