ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டில் அடுத்து எதிர்பார்க்கப்படும் படமாக 'பிரம்மாஸ்திரா' படம் இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தைத் தென்னிந்தியாவில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' புகழ் இயக்குனர் ராஜமவுலி வெளியிடுகிறார். இப்படத்தின் தயாரிப்பில் கரண் ஜோஹர் இருப்பதாலும், வாரிசு ஜோடிகளான ரன்பீர், ஆலியா இருப்பதாலும் 'பாய்காட்' சர்ச்சையில் இந்தப் படமும் சிக்கியுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில், ஜுனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜமவுலி பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அயன் முகர்ஜி பற்றியும், இந்தப் படம் பற்றியும் என்னிடம் கரண் ஜோஹர் பேசினார். அவர் மீதுள்ள மரியாதையால் படத்தைப் பற்றிக் கேட்டேன். அயன் முகர்ஜி 'அஸ்திரங்கள்' பற்றிப் பேசியதும் என்னுடைய சிறிய வயது பேண்டஸி விஷயங்கள் ஞாபகம் வந்து போனது. அது பற்றி நிறைய உழைத்து எழுதியிருக்கிறார் அயன். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டும்.
நமது கலாச்சாரத்தில் உள்ள சூப்பர் பவர், கதைகளைப் பற்றிய படம் இது. இந்திய கலாச்சாரத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய படம்தான் இந்த 'பிரம்மாஸ்திரா'. அதனால்தான் இந்தப் படத்தை தென்னிந்தியாவில் வெளியிடுகிறேன்,” எனக் கூறியுள்ளார்.