நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி, அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஆகியோர் மும்பை அருகில் அலிபாக் என்ற இடத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பார்ம் ஹவுஸ் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்களாம்.
ஆறு மாதங்களுக்கு முன்பாக அந்த இடத்தை விராட்டும், அனுஷ்காவும் நேரில் சென்று பார்த்துள்ளனர். விராட் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அதனால், அவரது சகோதரர் விகாஸ் கோலி பதிவுத்துறை வேலைகளைப் பார்த்து வருகிறாராம்.
மகாராஷ்டிர மாநிலம், ரைகாட் மாவட்டத்தில், அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் சுமார் 3350 சதுர மீட்டரில் அந்த பார்ம் அவுஸ் உள்ளதாம். இரண்டு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 1ம் தேதி அந்த இடத்திற்கான பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
விராட் ஏற்கெனவே மும்பை, ஜுஹு பகுதியில் பாலிவுட் பாடகர், நடிகர் கிஷோர் குமார் குடும்பத்திற்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ளாராம். கோல்கட்டா, புனே, டில்லி ஆகிய இடங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய 'ஒன் 8 கம்யூன்' ரெஸ்ட்டாரன்டை விரைவில் ஆரம்பிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.