பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி போன்ற படங்களை தயாரித்த நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பஸ் கரோ ஆன்ட்டி. வருண் அகர்வால் எழுதிய நாவலை தழுவி உருவாகிறது. அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது: இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பற்றியது. மற்றும் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் இறங்கி முயற்சிப்பது மற்றும் ஒருவரின் கனவுகளைத் துரத்துவது எனும் வாழ்க்கை முறையில், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் காதல், அவர்களின் இக்கட்டான நிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
இளம் இந்தியாவின் ஆர்வத்தையும் தொழில்முனைவோரின் உணர்வையும், நகைச்சுவை நிறைந்த, ஊக்கமளிக்கும் கதையாக இப்படம் சொல்கிறது. யதார்த்தமான காட்சிகளால் படம் நிறைந்திருப்பதால் இது அடல்ட் கண்டன்ட் வகை படமாகிறது. என்றார்.