விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் பிருத்விராஜ். இதில் அவருடன் சஞ்சய் சத், சோனுசூட், மனுஷி ஷில்லர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ளார், ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். வருகிற 3ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த படம் இந்தியாவை ஆக்ரமித்த முகலாய மன்னர்களை எதிர்த்து போராடி இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னர் பிருத்விராஜின் வரலாற்ற கதை. இந்த படத்திற்கு பிருத்விராஜ் என்று மொட்டையாக பெயர் வைக்க கூடாது. சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என்று வைக்க வேண்டும் என்று பல இந்து அமைப்புகள் கூறின. தலைப்பை மாற்றாவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்றனர்.
இந்த கடுமையான எதிர்ப்புக்கு பிறகு படத்தின் தலைப்பை சாம்ராட் பிருத்விராஜ் என்று மாற்றி இருக்கிறார்கள். அதோடு இந்து மகாராஜாவின் வெற்றிக் கதை என்கிற டேக் லைனையும் இணைத்துள்ளனர்.