மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கிலிருந்து அடுத்த பான்-இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துள்ளவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் தயாரான 'புஷ்பா' படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் கிடைத்த வரவேற்பு போலவே மற்ற மொழிகளுக்கும் வரவேற்பு கிடைத்தது. ஹிந்தியில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது. இத்தனைக்கும் பெரிய அளவில் ஹிந்தியில் படத்தை பிரமோஷன் செய்யவில்லை.
ஒரு மாதத்திற்குள்ளாக இப்படம் ஓடிடியிலும் வெளியானது. மற்ற மொழிகளில் ஜனவரி 7ம் தேதிகளில் வெளியாக, ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியது. தற்போது அதைக் கடந்துள்ளது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்குச் சென்ற நடிகர்களில் பிரபாஸ் இதற்கு முன்பு 'பாகுபலி 1, 2, சாஹோ' ஆகிய படங்களில் 100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருந்தார். அவருக்குப் பிறகு இப்போது அல்லு அர்ஜுன் 'புஷ்பா' மூலம் 100 கோடி சாதனையைப் படைத்துள்ளார்.