படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
பாலிவுட் நடிகை கஜோல் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மின்சார கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர். அவ்வப்போது நடித்து வரும் கஜோல் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உள்ளார்.
தற்போது 47 வயதான கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர் தனது படத்திற்கு பதிலாக தனது மகள் நைசாவின் படத்தை பகிர்ந்துள்ளார். தான் மிகவும் சோர்ந்துள்ளதாகவும், மூக்கு சிவந்துள்ளதாகவும் அதனால் மகள் படத்தை வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.