கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
முன்னணி பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி. பாலிவுட் படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றவர். தற்போது ஷோ ஸ்டாப்பர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வேதா திவாரி. எனது உள்ளாடைகளை கடவுள்தான் அளவெடுத்து வருகிறார் என்று கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய பிரதேச அரசு ஸ்வேதாவின் பேச்சு குறித்து 24 மணிநேரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் கமிஷனுக்கு உத்தரவிட்டது. விஷயம் பெரிதாகவே இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய கருத்து யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்வகையில் பேசப்படவில்லை. என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என் போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என்னுடைய செயல்பாடுகளோ வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.