கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சூரரைப் போற்று'. டெக்கான் ஏவியேஷன் என்ற விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்து குறைந்த கட்டணத்தில் மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்த கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் 'சூரரைப் போற்று'.
இப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்றது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், விக்ரம் மல்கோத்ராவின் அபுதன்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன.
சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போதைய தகவல்படி அக்ஷய்குமார் அக்கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷய்குமார் தற்போது நடித்து வரும் 'செல்பி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் 'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.