கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அருகே கேத்தன் கக்கட் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. சமீபத்தில் இவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சல்மான் கான் பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் நடப்பதாகவும், அங்கு திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியது, தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், சல்மான் கானின் மதம் குறித்தும் அவர் அவதுாறாக பேசி உள்ளார்.
இந்நிலையில் கேத்தன் கக்கட்டிற்கு எதிராக சல்மான் கான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி ஆஜரானார்.அப்போது, நீதிபதியிடம் அவர் கூறியதாவது: எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சல்மான் கான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவர் மதம் குறித்து அவதுாறாக பேசி உள்ள கேத்தன் கக்கட்டிற்கு, இனி இதுபோன்ற கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க கேத்தன் கக்கட்டிற்கு உத்தரவிட்டது.