காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கும் பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசுக்கும் 2018ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு அவரது சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று இருந்த பெயரை பிரியங்கா சோப்ரா என மாற்றியதைத் தொடர்ந்து அவரும் நிக் ஜோனசும் பிரிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக தனது கணவரின் உடற்பயிற்சி வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் தங்களது குழந்தை பற்றிய அறிவிப்பு ஒன்றை ஒன்றாக வெளியிட்டுள்ளனர். “வாடகைத் தாய் மூலம் நாங்கள் ஒரு குழந்தையை வரவேற்பதை உறுதி செய்வதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்த எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், மிக்க நன்றி,” என இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு மேல் வேறு எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.