இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரபிரசேத மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளராக அர்ச்சனா கவுதம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரணம், அர்ச்சனா கவுதம் ஒரு பிகினி மாடல் அழகி மற்றும் பாலிவுட் நடிகை. பிகினி 2018 போட்டியில் டைட்டில் வென்ற இவர் மிஸ்.உத்தரபிரதேசம் டைட்டிலையும் வென்றவர். அதன்பிறகு தி கிராண்ட் மஸ்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். ஹசீனா பார்க்கர், பாரத் கம்பெனி உள்பட பல படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பிகினி அழகிதான், நடிகைதான், ஊடகத்துறையில் எனது தொழிலை எனது அரசியல் வாழ்க்கையுடன இணைத்து பார்க்க வேண்டாம். என்று கூறியிருக்கிறார்.