பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக உருவெடுத்த போது எதிர்பாராத விதமாக அரசியல் களத்துக்குள் வந்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமான பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த திமுக தோல்வி அடைந்ததை அடுத்து வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் டவுன் ஆனது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் தோல்வி அடைந்த போதும், குணச்சித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலு திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போகிறேன்'' என்று பதில் கொடுத்து இருக்கிறார் வடிவேலு.