காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழில் மாதவன்- விஜயசேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது அவர்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். மாதவன் நடித்த என்கவுண்டர் போலீசாக சைப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் தாதாவாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் காட்சிகளை அபிதாபியில் படமாக்கியவர்கள், இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை லக்னோ வில் தொடங்கியுள்ளனர். இதில், ஹிருத்திக் ரோஷன், சைப்அலிகான் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் இந்த படத்தில் தான் முதன்முதலாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்தாண்டு செப்., 30ல் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளனர்.