சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என கடந்த முப்பது வருட காலத்தில் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டவர் தான் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு இயக்குனராக மாறி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு முன்னேறினார். ஆனால் சமீப வருடங்களாக அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் சற்றே சறுக்கவே, தனக்கு ஏற்கனவே கைகொடுத்த நடிகன் அவதாரத்திற்கு மீண்டும் மாறியுள்ளார் பிரபுதேவா.
கடந்த சில தினங்களுக்கு முன் அவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் ஓடிடியில் வெளியானது. தேள், பகீரா, ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்தநிலையில் தற்போது ஜர்னி என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார் பிரபுதேவா. இந்தப்படத்தை ஆஷிஷ் குமார் துபே என்பவர் இயக்குகிறார். 2022ல் துவங்கவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற உள்ளது.