'கேம் சேஞ்ஜர்' தோல்விக்கான காரணம் சொன்ன தில் ராஜு | பிளாஷ்பேக்: பி பி ஸ்ரீநிவாஸ் திரையிசைப் பயணத்தில் வசந்தம் வீச வைத்த “காலங்களில் அவள் வசந்தம்” | உதட்டில் முத்தம் - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயண் | பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ் | உலக தரத்தில் எம்புரான் டீசர் ; பிரபாஸ் பாராட்டு | கந்தன் கருணை, மௌனம் பேசியதே, மாஸ்டர் - ஞாயிறு திரைப்படங்கள் | 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை காதல் திருமணம் செய்து கொண்டார். அனுஷ்காவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. விராட்டும், அனுஷ்காவும் தங்கள் குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிட்டுள்ளார்கள்.
குழந்தை பிறந்த பிறகு கிளாமரான புகைப்படங்களை அனுஷ்கா அதிகம் வெளியிட்டதில்லை. குறிப்பாக நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிடவேயில்லை. ஆனால், நேற்று நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் சற்றே கிளாமரான இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதற்கு 24 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.
அந்த நீச்சல் உடையின் விலை மட்டும் 8 ஆயிரம் ரூபாயாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் குழந்தை பெற்றதற்குப் பிறகான உடல் தோற்றத்தைக் குறித்து நிறைய பேசியிருந்தார் அனுஷ்கா. தான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதை வெளி உலகத்திற்குக் காட்டவே அனுஷ்கா இந்த நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
2018ல் வெளிவந்த 'ஜீரோ' படம்தான் அனுஷ்காவின் கடைசி ஹிந்திப் படம். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் வெப் சீரிஸ்களை மட்டும் தயாரித்து வந்தார். விரைவில் புதிய படங்களில் அவரைக் கதாநாயகியாக எதிர்பார்க்கலாம் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.